தமிழ்நாடு

ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்..! காற்று மாசுவை குறைக்க டெல்லி அரசு அதிரடி உத்தரவு

Published On 2025-03-01 17:50 IST   |   Update On 2025-03-01 17:50:00 IST
  • டெல்லியில் 15 ஆண்டுகள் முடிந்த வாகனங்களுக்கு எரிபொருள் கட்டுப்பாடு விதித்துள்ளது.
  • சிஎன்ஜி பேருந்துகள் படிப்படியாக நிறுத்தப்பட்டு மின்சார பேருந்துகளால் மாற்றப்படும்.

டெல்லியில் 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வாகனங்களுக்கு, ஏப்ரல் 1ம் தேதி முதல் பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் வழங்கப்படாது என டெல்லி மாநில அரசு அறிவித்துள்ளது.

காற்று மாசை குறைக்கும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பை சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங் வெளியிட்டார்.

டெல்லியில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள பாஜக அரசு, தனது வாக்குறுதிகளில் மாசற்ற டெல்லியை உருவாக்குவோம் என்று தெரிவித்திருந்தது.

அதன் ஒரு பகுதியாக, இனி டெல்லியில் 15 ஆண்டுகள் முடிந்த வாகனங்களுக்கு எரிபொருள் கட்டுப்பாடு விதித்துள்ளது.

மேலும் டிசம்பர் 2025-க்குள் டெல்லியில் உள்ள 90 சதவீத பொது சிஎன்ஜி பேருந்துகள் படிப்படியாக நிறுத்தப்பட்டு மின்சார பேருந்துகளால் மாற்றப்படும் என்றும் கூறினார்.

Tags:    

Similar News