2026 தேர்தலில் சட்டமன்றத்தில் த.மா.கா குரல் ஒலிக்க வியூகம் அமைப்போம்- ஜி.கே.வாசனின் புத்தாண்டு நம்பிக்கை
- புதிய உறுப்பினர்களுக்கான உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
- தேர்தல் நெருங்கி வரும் வருடம் என்பதால் இயக்கத்திற்கு வலுசேர்க்கும் வகையில் கூட்டங்கள் நடத்தப்படும்.
சென்னை, ஜன. 1-
புத்தாண்டு தினத்தை யொட்டி த.மா.கா. தலைவர் ஜி. கே.வாசன் கூறிய தாவது:-
இந்த ஆண்டு வரப்போகும் சட்டமன்ற தேர்தலுக்கான முன்னறிவிப்போடு பிறக்கிறது .2026 சட்டமன்றத் தேர்தலில் சட்டசபையில் த.மா.கா.வின் குரல் ஒலிக்கும் வகையில் இந்த ஆண்டு கட்சியின் செயல் திட்டங்களையும் ,வியூகங்க ளையும் வகுத்து செயல்ப டுத்துவோம்.
வருகிற 2-ந் தேதி திருச்சி, 4-ந் தேதி மதுரை, 5-ந்தேதி கோவை, 6-ந் தேதி சென்னை, ஆகியமண்டலங்க ளில் இயக்கத்திற்கு வலுவூட்டவும் தொண்டர்க ளுக்கு உற்சாகம் ஊட்டுகின்ற வகையிலும் புதிய உறுப்பினர்களுக்கான உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
அதை தொடர்ந்து பிப்ரவரி மாதத்தில் நகரம் முதல் கிராமங்கள் வரை தொண்டர்களை சந்திக்கும் நிகழ்ச்சியை நடத்த இருக்கி றோம். மார்ச் மாதத்தில் இருந்து 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் அட்டவணைகள் தயாரிக்கப்பட்டு வேலை திட்டங்கள் செயல்ப டுத்தப்படும். முதலில் 4 மண்டலங்களிலும் வட்டார முதல் நகரம் வரையிலான அனைத்து நிர்வாகிகளின் கூட்டமும் ,அடுத்த கட்டமாக 25 எம்.எல்.ஏ. தொகுதி களுக்கு ஒரு கூட்டம் என்ற வகையில் அனைவரையும் சந்தித்து தேர்தல் பணிகளை தொடங்க இருக்கிறோம்.
தேர்தல் நெருங்கி வரும் வருடம் என்பதால் இயக்கத்திற்கு வலு சேர்க்கும் வகையில் கூட்டங்கள் நடத்தப்படும். எப்படியும் வரப்போகும் தேர்தலில் சட்டமன்றத்தில் த.மா.கா.வினர் குரல் ஒலிக்கும் வகையில் உழைப்போம். மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவோம்.
இன்று காலை கட்சி அலுவலகத்தில் ஜி.ேக. வாசன் தொண்டர்களை சந்தித்தார். நிர்வாகிகளும் தொண்டர்க ளும் அவருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்கள்.