தமிழ்நாடு

பாலியல் வன்கொடுமை- கைதான ஞானசேகரனுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்

Published On 2024-12-26 01:59 GMT   |   Update On 2024-12-26 01:59 GMT
  • தப்பி ஓடியதால் கீழே விழுந்து இடது கால், இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
  • ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள சிறை வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்பவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனிடையே போலீசார் ஞானசேகரனை கைது செய்யும் போது தப்பி ஓடியதால் கீழே விழுந்து இடது கால், இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள சிறை வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து போலீசார் ஞானசேகரனை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது ஞானசேகரனுக்கு 15 நாள் நீதிமன்ற காவலை நீதிபதி பிறப்பித்தார்.  

Tags:    

Similar News