தமிழ்நாடு

பாலியல் புகார்- காவல் இணை ஆணையர் மகேஷ் குமார் சஸ்பெண்ட்

Published On 2025-02-13 10:42 IST   |   Update On 2025-02-13 11:14:00 IST
  • 'விசாகா' கமிட்டிக்கு பெண் காவலரின் புகார் மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
  • தமிழகம் முழுவதும் பாலியல் சம்பவங்கள் தொடர்பான புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை:

சென்னை போக்குவரத்து பிரிவில் இணை ஆணையராக பணி புரிந்து வருபவர் மகேஷ்குமார்.

ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் பெண் போலீஸ் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட பெண் காவலர் இது தொடர்பாக டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி அரசு துறைகளில் பாலியல் புகார்களை விசாரிக்கும் 'விசாகா' கமிட்டிக்கு பெண் காவலரின் புகார் மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி விசாகா கமிட்டியில் இடம்பெற்று உள்ள பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் குழுவினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே ஐ.பி.எஸ். அதிகாரி மகேஷ்குமாரை சஸ்பெண்டு செய்து தமிழக அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் பாலியல் சம்பவங்கள் தொடர்பான புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு துறையில் உயர் பதவியில் இருப்பவராக இருந்தாலும் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இதன் பேரிலேயே ஐ.பி.எஸ். அதிகாரி சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார் என உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுபற்றி அவர் மேலும் கூறும்போது, காவல் துறையில் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகும் பெண்கள் துணிச்சலாக புகார் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

Similar News