முருக பக்தர்கள் மீது கை வைத்தால் நீங்க இருக்க மாட்டீங்க..- அமைச்சர்களை எச்சரித்த அண்ணாமலை
- எங்கு கலவரங்கள் ஏற்பட்டாலும் இரும்புக் கரம் கொண்டு அடக்கத் தயாராக இருக்கிறார் மு.க.ஸ்டாலின்.
- திமுகவின் இந்த மிரட்டல் உருட்டல் எல்லாம் எங்கக்கிட்ட வேண்டாம்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இன்று முதல் பக்தர்கள் கோயில், தர்காவிற்குச் செல்ல காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
இதைதொடர்ந்து, பேசிய அமைச்சர் சேகர் பாபு, " வட மாநிலங்களைப் போல் இங்கும் கலவரங்களை பாஜக ஏற்பட நினைக்கிறது என்றும் உறுதிமிக்க இரும்பு மனிதரான முதல்வர் எங்கு கலவரங்கள் ஏற்பட்டாலும் இரும்புக் கரம் கொண்டு அடக்கத் தயாராக இருக்கிறார்" என்றார்.
மேலும், பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, " இந்துக்களும், முஸ்லிம்களும் சகோதரர்களாக வாழுகின்ற மாநிலமாக தமிழ்நாடு விலங்குகிறது. இதைப் பெரிய விவகாரமாக்கி அதில் லாபம் அடைய வேண்டும் என நினைக்கும் தீய சக்திகளை ஒடுக்குவோம்" என்று காட்டமாக கூறினார்.
இந்நிலையில் அமைச்சர்கள் சேகர்பாபு, ரகுபதியின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
நீதிமன்றம் நேற்று ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கியவுடன் தன்னெழுச்சியாக பக்தர்கள் போராடினார்கள். எங்களை 'இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம், ஒடுக்குவோம்' என்று சொல்கிறார்கள்.
அங்குப் போராடுபவர்கள் முருக பக்தர்கள். அவர்கள் மீது கை வைத்தால் நீங்க இருக்க மாட்டீங்க. இனிமேல், 'இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம்' என்று பேசினால், ரகுபதி இருக்கும் இடம், அவருக்கே தெரியாமல் போகும் .
திமுகவின் இந்த மிரட்டல் உருட்டல் எல்லாம் எங்கக்கிட்ட வேண்டாம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.