தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நிறைவு- 5 மணி நிலவரப்படி 64.02% வாக்குகள் பதிவு

Published On 2025-02-05 18:11 IST   |   Update On 2025-02-05 18:11:00 IST
  • இடைத்தேர்தலில் 1 மணி நிலவரப்படி 42.41 சதவீத வாக்குகள் பதிவானது.
  • 3 மணி நிலவரப்படி 53.63 சதவீத வாக்குகளும் பதிவானது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி அளவில் தொடங்கியது. இத்தேர்தலில் தி.மு.க.வின் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி உட்பட 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவுக்காக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வந்தனர்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.85 சதவீத வாக்குகள் பதிவானது. காலை 11 மணி நிலவரப்படி 26.03 சதவீத வாக்குகள் பதிவானது.

தொடர்ந்து, பிற்பகல் 1 மணி நிலவரப்படி 42.41 சதவீத வாக்குகளும், 3 மணி நிலவரப்படி 53.63 சதவீத வாக்குகளும் பதிவானது.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.

இதற்கிடையே, இடைத்தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 64.02 % வாக்குகள் பதிவாகியுள்ளது.

Tags:    

Similar News