தமிழ்நாடு

பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.454 கோடிக்கு மது விற்பனை

Published On 2025-01-16 07:16 IST   |   Update On 2025-01-16 07:16:00 IST
  • பண்டிகை காலங்களின் போது, ‘டாஸ்மாக்' கடைகளில் திருவிழா கூட்டம் போன்று மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதும்.
  • திருவள்ளுவர் தினத்தையொட்டி நேற்று ‘டாஸ்மாக்' கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

சென்னை:

தமிழகத்தில் 4,500-க்கும் மேற்பட்ட 'டாஸ்மாக்' மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. அரசுக்கு வருவாய் ஈட்டி தருவதில் 'டாஸ்மாக்' நிர்வாகம் முக்கிய பங்கு வகிக்கிறது. மதுக்கடைகளில் வார நாட்களில் ரூ.90 கோடி முதல் ரூ.100 கோடி வரைக்கும், வார இறுதி நாட்கள், அரசு விடுமுறை தினங்களில் ரூ.120 கோடி வரைக்கும் மதுபானங்கள் விற்பனையாவது வழக்கம். பண்டிகை காலங்களின் போது, 'டாஸ்மாக்' கடைகளில் திருவிழா கூட்டம் போன்று மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதும்.

பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 13-ந்தேதி (போகி) ரூ.185 கோடியே 65 லட்சத்துக்கும், 14-ந்தேதி (பொங்கல் தினத்தில்) ரூ.268 கோடியே 46 லட்சத்துக்கும் என மொத்தம் ரூ.454 கோடியே 11 லட்சம் அளவுக்கு மதுபானங்கள் விற்பனையாகின.

இந்த விற்பனை விவரம் 'டாஸ்மாக்' வட்டாரத்தில் வெளியாகி உள்ளது.

திருவள்ளுவர் தினத்தையொட்டி நேற்று 'டாஸ்மாக்' கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போதும் ரூ.450 கோடிக்கு மேல் மது விற்பனையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News