மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி
- கடந்த 3-ந்தேதி தொடங்கிய மாநாடு இன்றுடன் நிறைவுபெறுகிறது.
- மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் பங்கேற்றுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு விழுப்புரத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 3-ந்தேதி தொடங்கிய மாநாடு இன்றுடன் நிறைவுபெறுகிறது. மாநாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத் தொடங்கி வைத்து பேசினார்.
இந்த மாநாட்டில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் எம்.ஏ.பேபி, ஜி.ராமகிருஷ்ணன், பிருந்தாகாரத், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கட்சியின் மத்தியக்குழு உறுப்பனிர் வாசுகி, டி.கே.ரங்கராஜன், எம்.பி.க்கள் சு.வெங்கடேசன், சச்சிதானந்தம், எம்எல்ஏக்கள் நாகை மாலி சின்னத்துரை உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.
இந்த நிலையில், மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்துள்ள மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சு.வெங்கடேசனை மாவட்ட ஆட்சியர் பழனி, கூடுதல் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் இருவரும் சந்தித்து நலம் விசாரித்தனர்.