தமிழ்நாடு

மன்மோகன் சிங் மறைவு- வௌ்ளி விழா கலை நிகழ்ச்சிகள் 2 நாட்களாக குறைப்பு

Published On 2024-12-29 15:04 GMT   |   Update On 2024-12-29 15:04 GMT
  • திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபத்தை இணைக்கும் கண்ணாடி பாலம் திறப்புக்கு தயாராகியுள்ளது.
  • கலை நிகழ்ச்சிகள் அனைத்தும், மன்மோகன் சிங் மறைவையொட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள பாறை ஒன்றில், உலகுக்கு பொதுமறையான திருக்குறளை தந்த திருவள்ளுவர் சிலையை நிறுவி 25 ஆண்டுகள் ஆவதையொட்டி நாளை (திங்கட்கிழமை) முதல் 3 நாட்கள் தமிழக அரசு சார்பில் வெள்ளி விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

இதற்காக குமரி மாவட்ட நிர்வாகம் கன்னியாகுமரி சுற்றுலாத்தலத்திலும், கடலின் நடுவே திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறைப் பகுதியிலும் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தது.

திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபத்தை இணைக்கும் கண்ணாடி பாலம் தற்போது திறப்புக்கு தயாராகியுள்ளது.

இந்நிலையில், கன்னியாகுமரியில் 3 நாட்கள் நடைபெற இருந்த திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகள் 2 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 31ம் தேதி நடைபெற இருந்த கலை நிகழ்ச்சிகள் அனைத்தும், மன்மோகன் சிங் மறைவையொட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால், ஜனவரி 1ம் தேதி நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் டிசம்பர் 31ம் தேதி நடைபெறும். டிசம்பர் 30, 31 என 2 நாட்கள் நிகழ்வுகள் நடைபெறும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News