தமிழ்நாடு

உயர்ந்து நிற்கும் வள்ளுவர் போல் தமிழ்நாடு சிறக்கட்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2024-12-29 11:23 GMT   |   Update On 2024-12-29 11:23 GMT
  • பேரறிவு சிலை (Statue of Wisdom) எனப் பெயர் சூட்டி விழா எடுத்து மகிழ்கிறது திராவிட மாடல் அரசு.
  • வள்ளுவம் போற்றி வாழ்க்கை சிறந்திட அனைவருக்கும் 2025 புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

உயர்ந்து நிற்கும் வள்ளுவர் போல் தமிழ்நாடு சிறக்கட்டும் என தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் அந்த கடிதத்தில், " திருக்குறளை வங்கிய திருவள்ளுவர் தமிழர்களின் உலக அடையாளமாக திகழ்கிறார்.

திருவள்ளுவர் சிலை, ஆழிப்பேரலையை எதிர்கொண்டு உயர்ந்து நிற்பதுபோல தமிழ்நாடு தடைகளைத் தகர்த்து முன்னேறும்.

உயர்ந்து நிற்கும் திருவள்ளுவர் சிலை போல தமிழ்நாடும், தமிழர்களும் நாளும் உயர்ந்திட வேண்டும்.

திருக்குறளில் உள்ள அதிகாரங்களைத் துணையாகக் கொண்டு எதேச்சதிகாரத்தை வெல்வோம்.

வள்ளுவர் நமக்கு வெறும் அடையாளம் அல்ல, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற சமூக நீதித் தத்துவத்தை வழங்கிய பேராசான்.

குமரியில் காலத்தால் அழியாத காவியமாக நிலைப்பெற்றுவிட்ட அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது.

பேரறிவு சிலை (Statue of Wisdom) எனப் பெயர் சூட்டி விழா எடுத்து மகிழ்கிறது திராவிட மாடல் அரசு.

பேரறிவுச் சிலையின் வெள்ளி விழா கன்னியாகுமரியில் டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய நாட்களில் நடைபெறவிருக்கிறது.

வெள்ளி விழாவின் அடையாளமாக வள்ளுவர் சிலை- விவேகானந்தர் மண்டபம் இடையே கண்ணாடிப் பாலம் அமைக்கப்பட்டு திறக்கப்படுகிறது.

தமிழின் சிறப்பை உலகம் உணர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் வெள்ளிவிழா கொண்டாடப்படுகிறது.

வள்ளுவம் போற்றி வாழ்க்கை சிறந்திட அனைவருக்கும் 2025 புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News