பழனிசாமியை எதிரியாக அல்ல உதிரியாகத்தான் பார்க்கிறோம் - சேகர்பாபு
- தமிழக மக்கள் அவர்களுக்கு கொடுத்துக்கொண்டிருக்கக்கூடிய பரிசு என்னவென்றால் தோல்வி தான்.
- 2026-ம் ஆண்டு 200 அல்ல 200-ஐ தாண்டி தி.மு.க. தலைமையில் உள்ள மதசார்பற்ற கூட்டணி வெல்லும்.
சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், முதல் எதிரி தி.மு.க.தான் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அப்போது அவர் கூறியதாவது:
ஏற்கனவே ஒழிந்துகொண்டு இருக்கக்கூடிய கட்சி அந்த கட்சி. முழுமையாக அதை அவர் ஒழித்து விட்டார்.
எதிரிகளே இல்லை நான் தான் எதிரி என்கிறார். நாங்கள் அவரை எதிரியாக பார்க்கவில்லை உதிரியாகத்தான் பார்க்கிறோம்.
அவர் தலைமை ஏற்ற பிறகு தமிழக மக்கள் அவர்களுக்கு கொடுத்துக்கொண்டிருக்கக்கூடிய பரிசு என்னவென்றால் தோல்வி தான்.
எங்கள் கழகத்தலைவர் தலைவராக முன்னின்று தேர்தலை சந்தித்த பிறகு தமிழக மக்கள் அவருக்கு கொடுத்துக் கொண்டிருக்கக்கூடிய பரிசு வெற்றி.
ஆகவே 2026-ம் ஆண்டு 200 அல்ல 200-ஐ தாண்டி தி.மு.க. தலைமையில் உள்ள மதசார்பற்ற கூட்டணி வெல்லும். இதை நாளைய வரலாறு சொல்லும் என்று கூறினார்.