பா.ம.க.வில் அன்புமணி தலைவரானது ஏன்?- அமைச்சர் சிவசங்கர்
- பா.ம.க.வில் மூத்தவர்கள் பலர் இருக்கும்போது அன்புமணி தலைவரானது ஏன்?
- மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று மோடி அரசை கேட்பீர்களா?
தி.மு.க.வில் எத்தனையோ தியாகங்கள் செய்து கட்சிக்காக சிறை சென்ற துரைமுருகன் இன்று தி.மு.க.விலேயே மூத்த அமைச்சராக இருக்கிறார். தி.மு.க.விற்காக எவ்வளவோ உழைத்த துரைமுருகனுக்கு பதவி தராதது ஏன்? என்றும், இன்னொரு துணை முதல்வர் பதவி கொடுத்திருக்கலாமே எனவும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பதிலடியாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறுகையில்,
பா.ம.க.வில் மூத்தவர்கள் பலர் இருக்கும்போது அன்புமணி தலைவரானது ஏன்?
பா.ம.க.வில் இன்று வரை பாடுபடும் ஜி.கே.மணியிடம் இருந்து தலைவர் பதவியை பறித்தது ஏன்?
இட ஒதுக்கீட்டிற்கே முட்டுக்கட்டையாக இருக்கும் பா.ஜ.க. கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டு பா.ம.க. தலைவர் அன்புமணி பேசுவாரா?
மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று மோடி அரசை கேட்பீர்களா? என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.