சிந்திக்கிற மண்டை இல்லைனு அடிக்கடி நிரூபிக்கிறீங்க! - விமர்சனத்திற்கு குஷ்பு பதிலடி
- நான் ஏன் இருகட்சிகளையும் விட்டு வெளியேறினேன்?
- ஜோக்கர்களின் ஒரு பகுதியாக இருக்க மறுத்துதான் நான் காங்கிரசில் இருந்து வெளியேறினேன்.
சென்னை:
GET OUT MODI என குறிப்பிட்டு 2019-ம் ஆண்டு குஷ்பு சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு தமிழ்நாட்டில் தாமரை மலராது எனக்கூறிய குஷ்பு... என சமூக வலைத்தளத்தில் விமர்சிக்கப்பட்டது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக நடிகையும், பா.ஜ.க. நிர்வாகியுமான குஷ்பு எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
குற்றத்தில் கூட்டாளிகள் ஒரே மாதிரியாக நினைக்கிறார்கள். காங்கிரசும், திமுகவும் ஒரே மொழியை பேசுகின்றன. கண்ணு இல்லாத தம்பிகளா, நான் ஏன் இருகட்சிகளையும் விட்டு வெளியேறினேன்?
ஜோக்கர்களின் ஒரு பகுதியாக இருக்க மறுத்துதான் நான் காங்கிரசில் இருந்து வெளியேறினேன். நான் புத்திசாலியாகவும் சிந்திக்கும் திறன் கொண்டவராகவும் இருப்பதால் காங்கிரசை விட்டு விலகினேன். சிந்திக்கிற மண்டை இல்லைனு அடிக்கடி நிரூபிக்கிறீங்க.
மூளை சிதைந்த இனமாக நீங்கள் இருப்பதில் தவறில்லை. ஏனெனில் நீங்கள் பின்பற்றுபவர் அப்படிப்பட்டவர் என்றார்.