தமிழ்நாடு

சட்ட சபையில் கண்டன கோஷம்: அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்

Published On 2025-01-06 10:50 IST   |   Update On 2025-01-06 10:50:00 IST
  • அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கண்டன பதாகைகள் ஏந்திய படி முழக்கம்.
  • சபாநாயகரின் இருக்கையை நோக்கி வந்து கோஷம் எழுப்பினார்கள்.

சென்னை:

சட்டசபையில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி புறப்பட்டு சென்றதும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கண்டன பதாகைகள் ஏந்திய படி முழக்கமிட்டனர்.

அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டபடி சபாநாயகரின் இருக்கையை நோக்கி வந்து கோஷம் எழுப்பினார்கள்.

அதற்கு சபாநாயகர் அனுமதிக்கவில்லை. சபாநாயகர் அப்பாவு, அவர்களை இருக்கையில் அமருமாறு திரும்பத் திரும்ப சொன்னார். ஆனால் அ.தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் இருக்கையில் அமராமல் தொடர்ந்து கோஷம் எழுப்பினார்கள்.

அப்போது சபாநாயகர் கூறுகையில், கலவரம் செய்யும் நோக்குடன் நீங்கள் வந்திருக்கிறீர்கள். திட்டம் போட்டு குந்தகம் விளை விக்கும் வகையில் செயல் படுகிறீர்கள். இதை அனுமதிக்க முடியாது. நீங்கள் இருக்கைக்கு சென்று அமராவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஆனாலும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இருக்கைக்கு செல்லாமல் தொடர்ந்து கோஷம் எழுப்பினார்கள். இதனால் சபாநாயகர் அப்பாவு, அவர்களை வெளியேற்றுமாறு சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார்.


இதைத்தொடர்ந்து சபை காவலர்கள் உள்ளே வந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை வலுக்கட்டாயமாக தூக்கி வெளியேற்றினார்கள். எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

இதனால் சட்டசபையில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் உருவானது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்ட பிறகு சபாநாயகர் அப்பாவு கவர்னர் உரையை தமிழில் வாசித்தார்.

Tags:    

Similar News