தமிழ்நாடு

சென்னையில் காற்றுடன் மழை- குளுகுளுவென மாறிய வானிலை

Published On 2024-12-26 02:06 GMT   |   Update On 2024-12-26 02:12 GMT
  • காலையிலும் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது.
  • 10 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள்ளாக மழைக்கு வாய்ப்பு.

வங்கக்கடலில் நிலவும் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக படிப்படியாக வழுவிழக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வருகிற 31-ந்தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, சென்னையில் நேற்று மாலை முதல் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. இதனை தொடர்ந்து நள்ளிரவில் விட்டு விட்டும் காலையிலும் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. எழும்பூர், புதுப்பேட்டை, அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளிலும் திருவள்ளூரில் மழை பெய்து வருகிறது. 

இதனை தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் காலை 10 மணிக்குள்ளாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Tags:    

Similar News