தமிழ்நாடு
மக்களாட்சியின் விழுமியங்களைப் பேணிக் காத்திட உறுதியேற்போம்- இபிஎஸ் குடியரசு தின வாழ்த்து
- சமஉரிமை, சமூகநீதி, கூட்டாட்சி ஆகிய உயரிய நெறிகளைக் கொண்ட அரசியலமைப்புச் சட்டத்தை நம் நாடு ஏற்ற பொன்னான்.
- 76வது குடியரசு தினத்தில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.
சென்னை:
நம் நாட்டின் 76-வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சமஉரிமை, சமூகநீதி, கூட்டாட்சி ஆகிய உயரிய நெறிகளைக் கொண்ட அரசியலமைப்புச் சட்டத்தை நம் நாடு ஏற்ற பொன்னாளான இந்த 76வது குடியரசு தினத்தில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.
அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மக்களாட்சியின் விழுமியங்களைப் பேணிக் காத்திட இந்நன்னாளில் உறுதியேற்போம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.