உள்ளூர் செய்திகள்

சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 34 பேருக்கு வருகிற 5-ந்தேதி வரை காவல்

Published On 2025-01-27 09:48 IST   |   Update On 2025-01-27 09:48:00 IST
  • நீதிபதி வீட்டில் அவர்கள் அனைவரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
  • மீனவர் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

ராமேசுவரம்:

ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 439 விசைப்படகுகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்துறை அலுவலக அனு மதி சீட்டு பெற்று கடலுக்கு சென்றனர்.

இதில் தங்கச்சிமடத்தை சேர்ந்த ரூபில்டன், டேனியல், ராமேசுவரம் சச்சின் ஆகியோருக்கு சொந்தமான 3 விசைப்படகுகளில் கேரளாவை சேர்ந்த 2 பேர் உள்பட மொத்தம் 34 மீனவர்கள் சென்றிருந்தனர்.

அவர்கள் கச்சத்தீவு, நெடுந்தீவு இடையே வலை களை விரித்து மீன்பி டித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக கூறி 3 விசைப்படகுகளில் இருந்த 34 மீனவர்களை சிறைபிடித்து, அவர்களின் 3 படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர்.

கைதான 34 மீனவர்களும் கிளிநொச்சியில் உள்ள மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களின் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்று காலை கிளி நொச்சியில் உள்ள நீதிபதி வீட்டில் அவர்கள் அனைவரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதையடுத்து 34 மீனவர்க ளையும் வருகிற பிப்ரவரி 5-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தர விட்டார். பின்னர் அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையே சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 34 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமருக்கும், வெளியுறவுத்துறை மந்திரிக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் அனுப்பி உள்ளார்.

கடந்த 2 வாரங்க ளில் மட்டும் ராமேசுவரம் மீனவர்கள் 45 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர் 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்தநிலையில், ராமேசுவரம் துறைமுக பகுதியில் அனைத்து விசைப்படகு மீனவர் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தொடர் வேலை நிறுத்த போராட்டம், சாலை மறியல் உள்ளிட்ட போராட் டங்களை முன்னெடுப்பது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News