தமிழ்நாடு

அத விடுங்க.. ஈரோட்டில் பெரியாரை பற்றி பேசி வாக்கு கேளுங்கள்- திமுகவுக்கு சீமான் சவால்

Published On 2025-01-21 16:19 IST   |   Update On 2025-01-21 16:19:00 IST
  • பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படம் கிராஃபிக்ஸ் என சர்ச்சை எழுந்தது.
  • புகைப்பட சர்ச்சை தொடர்பான கேள்விக்கு, ‘அத விடுங்க' என சீமான் பதில் கூறாமல் தவிர்த்தார்.

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உடன் சீமான் இருப்பது போன்ற புகைப்படத்தை எடிட் செய்ததே நான் தான் என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சங்ககிரி ராஜ்குமாரின் இந்த குற்றச்சாட்டிற்கு நாம் தமிழர் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் பூரிகுடிசையில் தமிழ்நாடு கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமையில் கள் விடுதலை மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமானிடம் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படம் கிராஃபிக்ஸ் என சர்ச்சை எழுந்தது குறித்து கேள்வி எழுப்பினர்.

அந்த கேள்விக்கு, 'அத விடுங்க' என சீமான் பதில் கூறாமல் தவிர்த்தார்.

இதனையடுத்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து பேசிய சீமான், "பெரியார் என பேசும் பெருமக்கள், பெரியார் பிறந்த மண் என சொல்லும் பெருமக்கள் பெரியாரை பற்றி பேசி வாக்கு கேளுங்களேன். சீமான் பெரியாரை விமர்சித்துவிட்டார் அவருக்கு ஓட்டு போடாதீர்கள் என ஒருமுறை பேசி பாருங்கள்.

பெரியாரை சொல்லி வாக்கு வாங்க போகிறீர்களா? காந்தி படத்தினைக் காட்டி வாக்கு வாங்க போகிறீர்களா? கொள்கை வழிநின்று ஆட்சி செய்பவர்களுக்கு கோடிகளை கொட்டி கொடுத்து வாக்கை பறிக்க வேண்டிய தேவை ஏன் வருகிறது" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News