தமிழ்நாடு

சென்னையில் அறிவியல் மையம் அமைக்கப்படும்- பட்ஜெட்டில் அறிவிப்பு

Published On 2025-03-14 11:22 IST   |   Update On 2025-03-14 11:22:00 IST
  • ரூ.50 கோடியில் அரசு பொறியியல் கல்லூரிகளில் திறன் மிகு மையங்கள் அமைக்கப்படும்.
  • அரசு பல்கலைகழகங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி ரூ.700 கோடியாக உயர்த்தப்படும்.

சென்னை:

தமிழக சட்டசபையில் இன்று தாக்கலான 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகள்...

* சென்னை கொளத்தூரில் அமைக்கப்பட்ட முதல்வர் படைப்பகம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட 30 மாநகராட்சிகளிலும் அமைக்கப்படும்.

* நீலகிரி குன்னூர், சென்னை ஆலந்தூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் புதிய அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும்.

* 1,308 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.150 கோடி மதிப்பில் 10 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும்.

* சென்னையில் ரூ.100 கோடியில் அறிவியல் மையம் அமைக்கப்படும்.

* சென்னை, கோவையில் ரூ.100 கோடி செலவில் அடிப்படை அறிவியல் & கணித ஆராய்சிப் படிப்புகள் மையம் அமைக்கப்படும்.

* அரசு பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு வளர்ந்து வரும் துறைகளின் புதிய பிரிவுகள் ஏற்படுத்தப்படும்.

* ரூ.50 கோடியில் அரசு பொறியியல் கல்லூரிகளில் திறன் மிகு மையங்கள் அமைக்கப்படும்.

* அரசு பல்கலைகழகங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி ரூ.700 கோடியாக உயர்த்தப்படும்.

Tags:    

Similar News