ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை- தமிழக அரசு அறிவிப்பு
- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடலுக்கு காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
- இளங்கோவனின் பொது வாழ்வைப் போற்றும் விதமாக அரசு மரியாதை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று காலை மரணம் அடைந்தார்.
ஆஸ்பத்திரியில் இருந்து அவரது உடல் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது மனைவி வரலட்சுமிக்கு ஆறுதல் தெரிவித்தார்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடலுக்கு காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இளங்கோவனின் பொது வாழ்வைப் போற்றும் விதமாக அரசு மரியாதை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மணப்பாக்கம் இல்லத்தில் இன்று பிற்பகல் வரை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு மணப்பாக்கம் மின் மயானத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் தகனம் செய்யப்படுகிறது.