தமிழ்நாடு

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ரூ.498 கோடி ஒதுக்கீடு

Published On 2025-02-18 18:43 IST   |   Update On 2025-02-18 18:43:00 IST
  • ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
  • கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்பட 18 மாவட்ட விவசாயிகள் பயன்பெறுவர்.

சென்னை:

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஃபெஞ்சல் புயல் காரணமாக விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. இதனால் விவசாயிகள் பெரிதும் அவதியடைந்தனர்.

பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக, தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது.

இதற்கிடையே, டெல்டா மாவட்டங்களில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ரூ.498.8 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.498.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிவாரணம் வழங்குவதன் மூலம் 5,18,783 விவசாயிகள் பயன் பெறுவர்.

மானாவாரி பயிர் ஹெக்டேருக்கு ரூ.8,500, நெற்பயிர், பாசன வசதி பெற்ற பயிர்களுக்கு ரூ.17,000 நிவாரணம் வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News