மொத்தம் 14,104: பொங்கல் பண்டிகைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம் - அமைச்சர் அறிவிப்பு
- பொங்கல் பண்டிகையை யொட்டி பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
- வருகிற 14-ந்தேதி பொங்கல் பண்டிகை மற்றும் அதனை தொடர்ந்து 15, 16-ந்தேதிகளில் மாட்டு பொங்கல், காணும் பொங் கல் கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
வருகிற 14-ந்தேதி பொங்கல் பண்டிகை மற்றும் அதனை தொடர்ந்து 15, 16-ந்தேதிகளில் மாட்டு பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
பொங்கலை சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட வசதியாக 17-ந்தேதி அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் தொடர்ச்சியாக 6 நாட்கள் அரசு விடுமுறை விடப்படு வதால் வெளியூர் செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்க ளில் இருந்து மொத்தம் 14,104 பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பொங்கல் திருநாளை யொட்டி 10-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை 4 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். வழக்கமாக இயக்கப் படும் 8368 பஸ்களுடன் சிறப்பு பஸ்கள் 5736 என மொத்தம் 14,104 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
சென்னையில் இருந்து வழக்கமாக வெளியூர்களுக்கு 2092 பஸ்கள் இயக்கப்படும். இவற்றுடன் சிறப்பு பஸ்கள் கூடுதலாக விடப்படும். கோயம்பேடு, மாதவரம், கிளாம்பாக்கம் ஆகிய பஸ் முனையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து 7 லட்சத்து 75 ஆயிரம் பேர் மற்ற ஊர்களுக்கு பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு 6 லட்சத்து 54 ஆயிரம் பேர் பயணம் செய்தனர். கோயம்பேட்டில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். மாதவரத்தில் இருந்து ஆந்திர மாநிலம் மற்றும் ஊத்துக் கோட்டை, திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலைக்கு குறிப்பிட்ட பஸ் கள் இயக்கப்படும். மற்ற அனைத்து பஸ்களும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும்.
பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்ப வசதியாக 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 10,460 வழக்கமான பஸ்களுடன் சிறப்பு பஸ்கள் 5,340 சேர்த்து மொத்தம் 15,800 பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.