தமிழ்நாடு
null

பொதுத்தேர்வு எழுதுவோருக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து

Published On 2025-03-03 07:32 IST   |   Update On 2025-03-03 09:51:00 IST
  • தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் இன்று தொடக்கம்.
  • பிளஸ் 12 பொதுத் தேர்வுகளை 8.21 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

தமிழ்நாட்டில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று (திங்கட்கிழமை) காலை தொடங்குகிறது. இந்த தேர்வை 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 பள்ளி மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 பள்ளி மாணவிகள், 18 ஆயிரத்து 344 தனித்தேர்வர்கள், 145 சிறைவாசிகள் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதுகின்றனர்.

இன்று பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், "தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொதுத் தேர்வு எழுத உள்ள 11 & 12ஆம் வகுப்பைச் சேர்ந்த அன்புத் தம்பிகள் மற்றும் தங்கைகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பொதுத் தேர்வினைத் துணிவுடன், தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு, தேர்வில் வெற்றி பெற்று, வாழ்வில் சிகரம் தொட வாழ்த்துகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News