தமிழ்நாடு
ஏழுகிணறு பகுதியில் தந்தையை கொலை செய்த மகன் கைது
- ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜெகதீஷ் என்பவர் ஏழுகிணறு பகுதியில் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்.
- ரத்த வெள்ளத்தில் தந்தை கிடந்ததை வீடியோ எடுத்து ரோகித் தனது மாமாவுக்கு அனுப்பி உள்ளார்.
சென்னை ஏழுகிணறு பகுதியில் தந்தையை மகன் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜெகதீஷ் என்பவர் ஏழுகிணறு பகுதியில் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் ஜெகதீஷை அவரது மகன் ரோகித் இரும்பு ராடால் அடித்து கொலை செய்துள்ளார். ரத்த வெள்ளத்தில் தந்தை கிடந்ததை வீடியோ எடுத்து ரோகித் தனது மாமாவுக்கு அனுப்பி உள்ளார்.
இதையடுத்து தந்தையை கொலை செய்த வழக்கில் ரோகித்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனது தாயை தந்தை அடித்துக் கொடுமைப்படுத்தியதால் ஆத்திரம் அடைந்த ரோகித் அவரை கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.