தமிழ்நாடு

ஈஞ்சம்பாக்கத்தில் 13 மீனவ கிராம மக்கள் பங்கேற்ற படகு போட்டி- உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Published On 2025-03-09 14:49 IST   |   Update On 2025-03-09 14:49:00 IST
  • வெற்றி பெற்ற முதல் 3 பேருக்கு பரிசுகளை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
  • பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஈஞ்சம்பாக்கத்தில் படகு போட்டி நடைபெற்றது. உத்தண்டி முதல் ஊரூர் குப்பம் வரை இந்த போட்டி நடைபெற்றது. இதில் 13 மீனவ கிராம மக்கள் பங்கேற்றனர்.

படகு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடலுக்குள் தனிப்படகில் சென்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவருடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இந்த போட்டியில் முதல் பரிசை கொட்டிவாக்கம் குப்பத்தை சேர்ந்த மோகன், கண்ணன் ஆகியோர் தட்டிச் சென்றனர். போட்டியில் வெற்றி பெற்ற முதல் 3 பேருக்கு பரிசுகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

மார்ச் 8-ந்தேதி மகளிர் தினம் கொண்டாடப் பட்டது. இந்த ஆட்சி அமைந்த பின்னர் ஒவ் வொரு நாளும் மகளிர் தினம் தான். ஒவ்வொரு திட்டத்தையும் முதல்-அமைச்சர் பார்த்து, பார்த்து செய்து வருகிறார்.

மீனவர்கள் நலவாரிய உறுப்பினர்கள் இயற்கை மரணம் அடைந்தால் அவர் களுக்கான நிவாரண தொகையை ரூ.25 ஆயிரமாக உயர்த்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றிக் கொடுத்தார். மீன் பிடி படகு உரிமம் புதுப்பித்தலை 3 வருடத்திற்கு ஒரு முறை மாற்றி அமைத்தார். மீன் வள பல்கலைக்கழகத்தில் மீனவ மாணவர்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீட்டை 20 சதவீதமாக உயர்த்தியுள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News