தமிழ்நாடு

பெண்கள் இட ஒதுக்கீடு சட்டத்தை தனியாக செயல்படுத்த வேண்டும்- மத்திய அரசுக்கு கமல்ஹாசன் கோரிக்கை

Published On 2025-03-09 14:51 IST   |   Update On 2025-03-09 14:51:00 IST
  • மக்கள்தொகையில் பாதியாக விளங்கும் பெண்களின் திறனை நாம் வெளிக்கொணர முடியும்.
  • பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது, தேசத்திற்கு அதிகாரம் அளிப்பதாகும்.

சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலமே ஒரு சிறந்த தேசத்தைக் கட்ட மைக்க முடியும். இந்தக் கருத்தைச் 'செயலாக்க நாம் இன்னும் வலுவாக உறுதியேற்க வேண்டும்'. நாடு முன்னேற்றத்தை நோக்கிச் செல்வதில் பெண்களின் தலைமைப்பண்பும், வலிமையும், தொலைநோக்குப் பார்வையும் முக்கியப் பங்காற்றும். ஆட்சி நிர்வாகத்தில் சமவாய்ப்பு அளிப்பதன் மூலமே, மக்கள்தொகையில் பாதியாக விளங்கும் பெண்களின் திறனை நாம் வெளிக்கொணர முடியும்.

தொகுதி மறுவரையறை என்பது தேசிய அளவில் நீண்ட விவாதத்திற்கு உட் படுத்த வேண்டிய விவகாரம் என்பதாலும், முறையாகச் செய்யாவிட்டால் அது கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப் படையையே பாதிப்புக்குள்ளாக்கி விடும் என்பதாலும், பெண்கள் இட ஒதுக்கீட்டு சட்டத்தை தொகுதி மறுவரையோடு இணைக்காமல் தனியாகவே, செயல்படுத்த வேண்டும் என்று இந்தியாவின் ஒட்டுமொத்தப் பெண்கள் சார்பாக வலியுறுத்துகிறேன். இதனைச் செயல்படுத்திடும் வகையில் பெண்கள் இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டது முதலே நான் கோரி வருவது போல், அரசியலமைப்பு (நூற்று ஆறாவது திருத்தம்) சட் டத்தை திருத்துமாறு ஒன்றிய அரசை மீண்டுமொருமுறை வலியுறுத்துகிறேன்.

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது, தேசத்திற்கு அதிகாரம் அளிப்பதாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News