தமிழ்நாடு

கள்ளக்காதலனை திருமணம் செய்து வைக்ககோரி போலீஸ் நிலையம் முன்பு இளம்பெண் தீக்குளிக்க முயற்சி

Published On 2025-01-02 06:38 GMT   |   Update On 2025-01-02 06:38 GMT
  • திருமணமான சமையல் காண்ட்ராக்டர் ஒருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.
  • மனவேதனை அடைந்த இளம்பெண் இதுபற்றி புகார் அளிக்க வடபழனி போலீஸ் நிலையத்துக்கு வந்தார்.

போரூர்:

வடபழனி, பகுதியை சேர்ந்த 35வயது இளம்பெண் கிளப்பில் நடனமாடி வருகிறார். இவர் திருமணமாகி கணவருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் இளம்பெண்ணுக்கும் அதே பகுதியை சேர்ந்த திருமணமான சமையல் காண்ட்ராக்டர் ஒருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.

அவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தன்னை 2-வதாக திருமணம் செய்து கொள்ளும்படி இளம்பெண், தனது கள்ளக்காதலன் சமையல் காண்டிராக்டரிடம்வற்புறுத்தினார்.

ஆனால் அவர் திருமணத்திற்கு மறுத்தார். இதனால் மனவேதனை அடைந்த இளம்பெண் இதுபற்றி புகார் அளிக்க நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் வடபழனி போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அப்போது பணியில் இருந்த போலீசார் இளம்பெண்ணுக்கு அறிவுரை கூறினர். எனினும் சமாதானம் அடையாத இளம்பெண் திடீரென தனது மோட்டார் சைக்கிளில் கேனில் வைத்திருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றிக் கொண்டு போலீஸ் நிலையம் முன்பு நின்ற படி"தற்கொலை செய்து கொள்ள போகிறேன்" என்று கூறி மிரட்டல் விடுத்தார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக அவர் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனர். பின்னர் அவரது கணவரை வரவழைத்த போலீசார் இளம்பெண்ணை எச்சரித்து அவருடன் அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News