தமிழ்நாடு

பிரதமராக இருந்த போது மதச்சார்பின்மையை பேணிக்காத்தார் வாஜ்பாய் - மு.க. ஸ்டாலின்

Published On 2024-12-25 07:18 GMT   |   Update On 2024-12-25 07:18 GMT
  • அரசியல் தலைவர்கள் வாஜ்பாயிக்கு புகழஞ்சலி செலுத்தினர்.
  • மதச்சார்பின்மைப் பண்பை அவர் பேணிக்காத்தார்.

மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள் இன்று நாடு முழுக்க கொண்டாடப்பட்டது. 100வது நாளை ஒட்டி, அரசியல் தலைவர்கள் வாஜ்பாயிக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வரிசையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாஜ்பாயி குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், "முன்னாள் பிரதமர் திரு. அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் நூறாவது பிறந்தநாளில் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக அவர் ஆற்றிய பங்களிப்பினையும், நமது தலைவர் கலைஞர் அவர்களுடன் அவர் கொண்டிருந்த நட்புறவினையும் நினைவுகூர்கிறோம்."

"வலதுசாரிக் கருத்தியல் கொண்டவராக இருந்தாலும், பிரதமர் பொறுப்பில் இருந்தபோது நாட்டின் மதச்சார்பின்மைப் பண்பை அவர் பேணிக்காத்தார். அவரது வாழ்வும் பணியும் நிலைத்து நிற்கும்!," என்று குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

Similar News