தமிழ்நாடு

வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு நாள்.. உருவப்படத்திற்கு த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை

Published On 2024-12-25 08:07 GMT   |   Update On 2024-12-25 08:07 GMT
  • அவரது நினைவிடத்தில் குருபூஜை விழா அனுசரிக்கப்பட்டது.
  • த.வெ.க. தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவின் முதல் பெண் சுதந்திர போராட்ட வீராங்கனை வேலுநாச்சியாரின் 228வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சிவகங்கை அரண்மனை வாயில் முன்பு அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை விழா அனுசரிக்கப்பட்டது.

ராணி வேலு நாச்சியாரின் நினைவு தினத்தையொட்டி சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு விஜய் மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினார். இது குறித்து த.வெ.க. தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், "மண்ணைக் காக்க வாளேந்திப் போர்க்களம் புகுந்த வீரப் புரட்சியாளர், இந்தியாவின் முதல் விடுதலைப் பெண் போராளி, அனைத்துச் சமூகத்தினரோடும் நல்லிணக்கத்தோடு நாடாண்ட தமிழச்சி, எம் கழகத்தின் கொள்கைத் தலைவர், வீரமங்கை, ராணி வேலு நாச்சியார் அவர்களின் நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News