தமிழ்நாடு
கையில் பாம்புடன் வெளியான வீடியோ - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டி.டி.எஃப். வாசன்
- வீடியோவால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
- வனத்துறை விசாரணை செய்வதாக தகவல்.
வீடியோ வெளியிட்டு அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருபவர் டி.டி.எஃப். வாசன். பைக் ரைடிங் வீடியோக்களை பதிவேற்றம் செய்து பிரபலமான இவர் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். சமயங்களில் சிறைவாசம் வரை சென்று வந்துள்ள டி.டி.எஃப். வாசன் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
புதிய வீடியோவில் காரில் பயணம் செய்த டி.டி.எஃப். வாசன் தனது கையில் பாம்பு ஒன்றுடன் விளையாடுகிறார். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட வீடியோ குறித்து வனத்துறை விசாரணை செய்வதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், தான் வெளியிட்ட வீடியோவில் இடம்பெற்றிருந்த பாம்பு வளர்க்க முறையாக உரிமம் பெற்று இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், உரிமம் இருந்தாலும் பாம்பை இப்படி கையாளக்கடாது என்று வனத்துறை விளக்கம் அளித்துள்ளது.