ஆதவ் அர்ஜூனாவிடம் பொறுப்பை வழங்கிய விஜய் - மாவட்ட செயலாளர்களுக்கு சிக்கல்
- தேர்தல் பணிகளில் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
- புகார்களில் சிக்கியவர்களும் நீக்கப்படலாம் என கூறப்படுகிறது.
சென்னை:
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது. கட்சி தொடங்கி 2-ம் ஆண்டு அடியெடுத்து வைத்துள்ளதால் மாவட்ட செயலாளர்கள், தேர்தல் வியூகம் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இதனிடையே நியமனம் செய்யப்பட்டுள்ள மாவட்ட செயலாளர்கள் மீது புகார்கள் வருவதால் அதுகுறித்தும் விசாரிக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் அளவிற்கு திறமை இல்லாதவர்களை நீக்கம் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாவட்ட செயலாளர்கள் மறுசீரமைப்பு பணியை ஆதவ் அர்ஜூனாவிடம் ஒப்படைக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் ஏற்கனவே நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்களுக்கும் சிக்கல் எனவும் கூறப்படுகிறது. மேலும் புகார்களில் சிக்கியவர்களும் நீக்கப்படலாம் என கூறப்படுகிறது.
அதன்படி, திறன்பட செயல்படாத மாவட்ட செயலாளர்களின் பட்டியலை தயார் செய்யும் ஆதவ், அதனை விஜயிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் அதன் அடிப்படையில் விஜய் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.