null
விஜய் உடன் கூட்டணியா? - விஜய பிரபாகரன் ஓபன் டாக்
- தற்போதைக்கு அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணியில் உள்ளது.
- தேர்தலுக்கு முன்பு எது வேண்டுமானாலும் மாறலாம்.
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. வரவுள்ள தேர்தலை எதிர்நோக்கி பலரும் காத்து உள்ளனர். இதற்கு நடிகர் விஜய் கட்சி தொடங்கி இருப்பதே காரணம். விஜய் எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பர், அவருக்கு மக்களின் ஆதரவு எந்தளவிற்கு இருக்கும் என பல கேள்விகள் எழுந்துள்ளது. இதனிடையே தேர்தலுக்காக பல்வேறு வியூகங்களை விஜய் வகுத்து வருகிறார்.
இந்த நிலையில், விஜய் தன்னை அரசியலில் நிரூபிக்க வேண்டும் என்று விஜயகாந்தின் மகனும், பாராளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டவருமான விஜய பிரபாகரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக விஜய பிரபாகரன் மேலும் கூறியதாவது:- விஜயகாந்த் 2005-ல் கட்சி தொடங்கி தேர்தலில் 12 சதவீத வாக்குகள் பெற்று அரசியலில் தன்னை நிரூபித்தார். அதே போல் விஜய் தன்னை அரசியலில் நிரூபிக்க வேண்டும்.
விஜய் அண்ணா தன்னை நிரூபித்த பின்னரே அவருடன் கூட்டணி வைப்பதா இல்லையா என தேமுதிக முடிவு செய்யும். தற்போதைக்கு அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணியில் உள்ளது. தேர்தலுக்கு முன்பு எது வேண்டுமானாலும் மாறலாம் என்றார்.