செய்திகள்
ஆண்ட்ராய்டு 8.0 பெயர் வெளியானது: ஆகஸ்டு 21-இல் அறிமுகம்
கூகுளின் புதிய இயங்குதளம் ஆகஸ்டு 21-ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், ஆண்ட்ராய்டு 8.0 பதிப்பின் பெயர் வெளியாகியுள்ளது. புதிய இயங்குதளத்தில் வழங்கப்படவுள்ள சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
கூகுளின் புதிய இயங்குதளம் சார்ந்த பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து கூகுள் வெளியிட்டுள்ள டீசரில் இயங்குதளத்தின் பெயர் தெரியவந்துள்ளது. அதன்படி புதிய ஆண்ட்ராய்டு மென்பொருள் ஆண்ட்ராய்டு ஒரியோ என அழைக்கப்படும்.
கூகுள் பிளஸ் தளத்தில் கூகுள் வெளியிட்டுள்ள நான்கு நொடி விடீசரில் ஆகஸ்டு 21-ம் தேதி மற்றும் ஆண்ட்ராய்டு ஒ என்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது. டீசர் தலைப்பில் கூகுள் ஒரியோ டீசர் என இடம்பெற்றிருப்பது இயங்குதளத்தின் பெயரை உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கூகுளின் புதிய அப்டேட் சார்ந்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், ஒரியோ சர்வதேச அளவில் அறியப்படும் பெயர் என்பதால் இந்த பெயர் சூட்டப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. கூகுள் ஆண்ட்ர்யாடு ஒ இயங்குதளத்தின் வெளியீடு ஆகஸ்டு 21, மதியம் 2.40 மணிக்கு நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
மற்ற கூகுள் விழாக்களை போன்றே புதிய இயங்குதளத்தின் அறிமுக நிகழ்வும் சர்வதேச அளவில் நேரலை செய்யப்படும் என கூறப்படுகிறது. மேலும் இந்த நிகழ்ச்சி சூரிய கிரகன தினத்தில் நடைபெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.