உலகம்
துருக்கியில் சோகம்: ஓட்டலில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 10 பேர் பலி
- ரிசார்ட்டில் உள்ள ஓட்டலில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
- இதனால் ஓட்டல் முழுவதும் கரும் புகை சூழ்ந்து காணப்பட்டது.
அங்காரா:
வடமேற்கு துருக்கியின் போலு மாகாணத்தின் கர்தல்காயா ரிசார்ட்டில் உள்ள ஓட்டலில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ஓட்டல் முழுவதும் கரும் புகை சூழ்ந்து காணப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கடுமையாகப் போராடிய பிறகே தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 32 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அந்த ஓட்டலில் 234 விருந்தினர்கள் தங்கியிருந்தனர் என்றும், முன்னெச்சரிக்கையாக ரிசார்ட்டில் உள்ள மற்ற ஓட்டல்களில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.