உலகம்

கொலம்பியாவில் ராணுவ அவசர நிலை அறிவிப்பு

Published On 2025-01-22 04:54 IST   |   Update On 2025-01-22 04:54:00 IST
  • கொலம்பியா எல்லை வழியாக கிளர்ச்சியாளர்கள் நுழைந்தனர்.
  • தடுக்க எல்லை பகுதியில் கொலம்பியா ராணுவ வீரர்களை நிலைநிறுத்தி உள்ளது.

பொகோடா:

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் கக்கடா மாகாணத்தில் பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் செயல்படுகின்றன. அவர்கள் அண்டை நாடான கொலம்பியாவின் எல்லைக்குள் நுழைந்து அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர்.

குறிப்பாக அப்பாவி மக்கள் மற்றும் பொதுச்சொத்துகளை குறிவைத்து அவர்கள் தாக்குதல் நடத்துவதால் அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். இதனை தடுக்க எல்லை பகுதியில் கொலம்பியா ராணுவ வீரர்களை நிலைநிறுத்தி உள்ளது.

அந்தவகையில் கொலம்பியா எல்லை வழியாக கிளர்ச்சியாளர்கள் நுழைந்தனர். அப்போது அவர்களை தடுக்க முயன்ற ராணுவ வீரர்களுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பயங்கர மோதல் நடைபெற்றது. இந்த மோதலில் இருதரப்பிலும் இதுவரை 80-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். எனவே அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் நிலைமையை சமாளிக்க வெனிசுலா எல்லையோர மாகாணங்களில் ராணுவ அவசர நிலையை அறிவித்து கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News