உலகம்
அமெரிக்காவில் அம்பேத்கரின் 19 அடி உயர சிலை திறப்பு
- சிலைக்கு ‘சமத்துவத்தின் சிலை’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
- இந்தியா மற்றும் பிற நாடுகளில் இருந்தும் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
அம்பேத்கரின் நினைவை போற்றும் வகையில் அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தின் அக்கோகீக் நகரில் 13 ஏக்கர் பரப்பளவில் அம்பேத்கர் சர்வதேச மையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் அம்பேத்கரின் முழு உருவ சிலை திறந்து வைக்கப்பட்டது. இந்த சிலைக்கு 'சமத்துவத்தின் சிலை' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த சிலை 19 அடி உயரம் கொண்டது. இது மிகவும் உயரமான சிலை ஆகும். சிலை திறப்பு விழாவில் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இந்தியா மற்றும் பிற நாடுகளில் இருந்தும் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த சிலையை பிரபல சிற்பி ராம் சுதார் வடிவமைத்துள்ளார். இவர் குஜராத் நர்மதா ஆற்றங்கரையில் நிறுவப்பட்டுள்ள 'ஒற்றுமையின் சிலை' என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல் சிலையை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.