இருளில் மூழ்கும் 20 லட்சம் காசா மக்கள்.. மின்சாரத்தை துண்டித்த இஸ்ரேல் - உதவிப் பொருட்களும் நிறுத்தம்
- இஸ்ரேல் மின்சார கழகத்திலிருந்து காசா பகுதிக்கு மின்சாரம் வழங்குவதை உடனடியாக நிறுத்துவதற்கான உத்தரவில் நான் கையெழுத்திட்டுள்ளேன்.
- கடந்த வாரம் முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததும், காசாவுக்கான மனிதாபிமான உதவிப் பொருட்கள் வழங்களை நிறுத்தியது.
இஸ்ரேலின் தொடர் தாக்குதலினால் காசா நகரம் உருக்குலைந்த நிலையில் காணப்படுகிறது. கடந்த 13 மாத தாக்குதலில் 56,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்ட நிலையில் லட்சக்கணக்கான மக்கள் காயமடைந்தனர். தங்கள் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து இடம்பெயர்ந்தனர்.
கடந்த ஜனவரியில் ஏற்பட்ட தற்காலிக போர் நிறுத்தத்தால் காசாவில் சிதிலமடைந்த தங்கள் இருப்பிடங்களுக்கு லட்சக்கணங்கனோர் திரும்பினர். இருப்பினும் அடிப்படை வசதிகள், சுகாதர மற்றும் மருத்துவ உதவிகளின்றி காசா மக்கள் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
கடந்த மாதங்களில் பிணை கைதிகள் பரிமாற்றம் நடக்கும் வரை அமைதி காத்த இஸ்ரேல், கடந்த வாரம் முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததும், காசாவுக்கான உணவு, தண்ணீர், மனிதாபிமான உதவிப் பொருட்கள் வழங்களை அடாவடியாக நிறுத்தியது.
இந்நிலையில் காசாவுக்காக மின்சார விநியோகத்தை துண்டிப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதனால் காசாவில் 20 லட்சதிற்கும் அதிகமான மக்கள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
ஏற்கனேவே காசா நகர கட்டமைப்பு பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளதால் மின்சாரம் வழங்க ஜெனரேட்டர்கள் மற்றும் சூரிய பேனல்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில் கிடைத்துவந்த சொற்ப மின்சாரமும் அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் இன்றி சிகிச்சை அளிப்பது கேள்விக்குறியாகியுள்ள நிலையில் மின்சார துண்டிப்பு மேலும் ஆழாமாக தாக்கத்தை ஏற்படுத்தும்.
இஸ்ரேலிய எரிசக்தி அமைச்சர் எலி கோஹன் அளித்த பேட்டியில், இஸ்ரேல் மின்சார கழகத்திலிருந்து காசா பகுதிக்கு மின்சாரம் வழங்குவதை உடனடியாக நிறுத்துவதற்கான உத்தரவில் நான் கையெழுத்திட்டுள்ளேன். பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும், காசாவில் இருந்து ஹமாஸை ஒழிப்பதற்கும் எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் பயன்படுத்துவோம் என்று தெரிவித்தார்.
இரண்டாம் கட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஹமாஸ் அமைப்பினரை விட தங்கள் கை ஓங்கி இருக்க வேண்டும் என்பதற்காக இஸ்ரேல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே இதனால் அப்பாவி மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த கவலை எழுந்துள்ளது.