அமெரிக்காவில் பரபரப்பு: வெள்ளை மாளிகை அருகே மர்ம நபர் மீது துப்பாக்கிச்சூடு
- வெள்ளை மாளிகை பகுதியில் ஆயுதம் ஏந்திய, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உலா வந்தார்.
- அந்த நபரை அமெரிக்க ரகசிய பாதுகாப்பு பணியாளர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது வேட்பாளராக இருந்த டொனால்டு டிரம்ப்பை கொல்ல முயற்சி நடந்தது. மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டத்தில் டிரம்பின் காதில் காயம் ஏற்பட்டது. தாக்குதல் நடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே, தேர்தலில் வென்ற டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபராக பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், வெள்ளை மாளிகை அருகே மர்ம நபர் ஒருவர் ஆயுதங்களுடன் சுற்றி வந்துள்ளார். இதைக் கண்ட பாதுகாப்புப் பணியாளர்கள் அந்த நபரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அந்த நபர் பலத்த காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அந்த நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பை தாக்க திட்டமிட்டு அந்த நபர் அங்கு சுற்றித் திரிந்தாரா என்ற கோணத்தில் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துப்பாக்கிச்சூடு நடந்தபோது அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.