செய்திகள்

பெல்ஜியம்: ஒரே பாதையில் சென்ற சரக்கு - பயணிகள் ரெயில் மோதிய விபத்தில் 3 பேர் பலி

Published On 2016-06-06 10:21 IST   |   Update On 2016-06-06 10:21:00 IST
பெல்ஜியம் நாட்டின் கிழக்குப் பகுதியில் ஒரே தண்டவாளத்தில் சென்ற சரக்கு ரெயிலுடன் பயணிகள் ரெயில் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
புருசல்ஸ்:

பெல்ஜியம் நாட்டின் கிழக்குப் பகுதியில் ஒரே தண்டவாளத்தில் சென்ற சரக்கு ரெயிலுடன் பயணிகள் ரெயில் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

பெல்ஜியம் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள செயிண்ட் ஜார்ஜஸ் சர் மியுசே மாவட்டத்தில் சுமார் 50 பயணிகளுடன் சென்ற ரெயில் (உள்ளூர் நேரப்படி)  நேற்று பின்னிரவு முன்னால் சென்றுகொண்டிருந்த சரக்கு ரெயில் மீது மோதியது. இதனால் பயணிகள் ரெயிலின் இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி, தடம்புரண்டது.

இந்த விபத்தில் மூன்றுபேர் உயிரிழந்ததாகவும், சுமார் 40 பேர் காயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், முன்னால் சரக்கு ரெயில் சென்றுகொண்டிருக்கும் நிலையில் அதே தண்டவாளத்தின்மீது பயணிகள் ரெயில் செல்ல எப்படி சிக்னல் அளிக்கப்பட்டது? என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

Similar News