செய்திகள்

துருக்கியில் போலீஸ் வாகனத்தின்மீது கார் குண்டு தாக்குதல்: 11 பேர் பலி

Published On 2016-06-07 13:02 IST   |   Update On 2016-06-07 13:57:00 IST
துருக்கி நாட்டின் தலைநகரான இஸ்தான்புல்லில் போலீஸ் வாகனத்தின்மீது இன்று தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் ஏழு போலீசார் உள்பட 11 பேர் கொல்லப்பட்டனர்.
இஸ்தான்புல்:

துருக்கி நாட்டின் தலைநகரான இஸ்தான்புல்லில் போலீஸ் வாகனத்தின்மீது இன்று தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் ஏழு போலீசார் உள்பட 11 பேர் கொல்லப்பட்டனர்.

துருக்கி நாட்டின் தலைநகரான இஸ்தான்புல்லின் மையப்பகுதியில் உள்ள பல்கலைக்கழகத்தின் அருகே இன்று பரபரப்பான காலை நேரத்தில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் ஏழு போலீசார் உள்பட 11 பேர் கொல்லப்பட்டதாகவும், படுகாயங்களுடன் பலர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படும் நிலையில் இன்றைய தாக்குதலுக்கு எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை.

Similar News