செய்திகள்

துருக்கி விமான நிலையத்தில் ராக்கெட் தாக்குதல்

Published On 2016-08-28 16:23 IST   |   Update On 2016-08-28 16:23:00 IST
துருக்கியில் உள்ள டியார்பகிர் விமான நிலையத்தில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆங்காரா:

துருக்கியில் உள்ள டியார்பகிர் விமான நிலையத்தில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

துருக்கி நாட்டில் உள்ள டியார்பகிர் நகரில் செயல்படும் விமான நிலையத்தில் இருந்து பெருமளவில் உள்நாட்டு விமான சேவை வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், டியார்பகிர் விமான நிலையத்தில் வி.ஐ.பி. அறைக்கு வெளியே உள்ள போலீஸ் சோதனை சாவடியில் நேற்றிரவு ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

விமான நிலையத்தை நோக்கி ஏவப்பட்ட நான்கு ராக்கெட்டுகள் நிலப்பரப்பில் விழுந்ததாகவும், இதனால் பயணிகள் மற்றும் விமானங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இந்த ராக்கெட் தாக்குதல் தொடர்பாக யாரும் இதுவரை பெறுப்பேற்காத நிலையில், குர்திஷ் போராளிகள் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிப்படுகின்றது.

Similar News