செய்திகள்

அமெரிக்காவில் வாலிபர் மூளையில் சொருகி இருந்த 9 செ.மீ. நீள குச்சி ஆபரே‌ஷன் மூலம் அகற்றம்

Published On 2016-09-06 12:58 IST   |   Update On 2016-09-06 12:58:00 IST
வாலிபரின் மூளையில் 9 செ.மீ. குச்சி பாய்ந்திருந்த நிலையில் அவர் உயிர் பிழைத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
அரிசோனா:

அமெரிக்காவில் உள்ள அரிசோனாவில் சைனிஸ் ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலுக்கு சீன இளைஞர்கள் 2 பேர் சாப்பிட வந்தனர்.

அவர்கள் நூடுல்ஸ் உணவை வாங்கி சாப்பிட்டார்கள். அப்போது அவர்களுக்குள் திடீரென வாய் தகராறு ஏற்பட்டது. நூடுல்ஸை சாப்பிட பயன்படுத்தும் குச்சியை எடுத்து ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

இதில், ஒரு வாலிபர் தலையில் குச்சி நுழைந்து உடைந்தது. ஆபத்தான நிலையில் இருந்த அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ஸ்கேன் எடுத்து பார்த்த போது குச்சி, மண்டை ஓட்டை உடைத்து கொண்டு உள்ளே 9 செ.மீ. ஆழத்தில் மூளைக்குள் பதிந்து இருந்தது. அதை ஆபரே‌ஷன் செய்து அகற்றினார்கள். அறுவை சிகிக்சைக்கு பின் உயிர் பிழைத்தார்.

பொதுவாக மூளைக்குள் இதுபோன்ற வேறு பொருட்கள் ஏதாவது புகுந்து விட்டால் உயிர் இழப்பு ஏற்பட்டு விடும். ஆனால், இந்த வாலிபரின் மூளையில் 9 செ.மீ. குச்சி பாய்ந்திருந்த நிலையில் அவர் உயிர் பிழைத்திருப்பது ஆச்சரியம் என்று டாக்டர்கள் கூறினார்கள்.

Similar News