செய்திகள்

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர முயன்ற அமெரிக்க வாழ் இந்தியருக்கு 3 ஆண்டு சிறை

Published On 2016-11-21 11:27 IST   |   Update On 2016-11-21 11:27:00 IST
ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர முயன்ற அமெரிக்க வாழ் இந்தியருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
நியூயார்க்:

அமெரிக்காவில் சிகாகோவை சேர்ந்த முகமது ஹமாஷ் கான் (21). அமெரிக்கவாழ் இந்தியரான இவர் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர 2 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிட்டார். அதற்காக சிரியாவிக்கு புறப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொண்டார்.

ஆனால் அவரை அமெரிக்க போலீசார் கைது செய்தனர். அவர் மீது சிகாகோ பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணை நீதிபதி ஜான் தார்ப் முன்னிலையில் நடந்தது. விசாரணை முடிந்த நிலையில் வாலிபர் முகமது ஹமாஷ் கானுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

அப்போது கூறிய நீதிபதி இக்குற்றத்துக்கு 15 ஆண்டுகள் தண்டனை விதிக்கலாம். ஐ.எஸ். தீவிரவாதிகளின் கோர்ட்டில் இக்குற்றத்துக்கு உன் தலை துண்டிக்கப்பட்டிருக்கும்.

ஆனால் நீ எதிரி என நினைத்து கொண்டிருக்கும் அமெரிக்கா உன்னை கொல்லவில்லை. நீ மனம் திருந்த ஒரு வாய்ப்பு வழங்கி உள்ளது என தெரிவித்தார்.

Similar News