செய்திகள்
கோப்புப்படம்

துருக்கி நாட்டு சரக்கு கப்பல் கருங்கடலில் மூழ்கியது - 11 பேர் கதி என்ன?

Published On 2017-11-01 15:47 IST   |   Update On 2017-11-01 15:47:00 IST
இஸ்தான்புல் அருகே உள்ள ஆசியப் பகுதியில் துருக்கி நாட்டு சரக்கு கப்பல் கருங்கடலில் மூழ்கியது. அதில் இருந்த 11 பேர் கதி என்ன? என்பது தொடர்பான எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இஸ்தான்புல்:

துருக்கி நாட்டுக்கு சொந்தமான பிலால் பால் என்ற சரக்கு கப்பல் அந்நாட்டின் வடமேற்கில் உள்ள புர்சா மாகாணத்தில் இருந்து வடக்கே உள்ள ஜோங்குல்டாக் மாகாணத்துக்கு கருங்கடல் வழியாக தாது இரும்பு ஏற்றிச் சென்று கொண்டிருந்தது.

நேற்றிரவு அந்த கப்பல் நடுக்கடலில் மூழ்கியதாக துருக்கி பிரதமர் பினாலி இல்ட்ரிம் இன்று தெரிவித்துள்ளார். இந்த விபத்துக்கான காரணம் குறித்து தெளிவான தகவல் ஏதும் வெளியாகவில்லை. அந்த கப்பலில் 11 மாலுமிகள் மற்றும் பணியாளர்கள் இருந்ததாக தெரிகிறது.

அவர்களை தேடும் பணியில் மூன்று படகுகளும் ஒரு ஹெலிகாப்டரும் ஈடுபட்டுவரும் நிலையில், காலியாக காணப்படும் அவசர உதவி படகுகளும், சில மிதக்கும் நீச்சல் உடைகளும் கப்பல் மூழ்கிய பகுதியில் காணப்படுவதாக துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


Similar News