செய்திகள்
தைவானில் ரிக்டரில் 6.4 அளவில் நிலநடுக்கம்: கட்டிடங்கள் இடிந்து விழுந்தன
தைவான் நாட்டில் இன்று இரவு ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், அந்த நகரில் உள்ள பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. #Tailwan #Earthquake
தைபே:
தைவான் நாட்டில் இன்று இரவு ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், அந்த நகரில் உள்ள பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன.
தைவான் நாட்டின் வட கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று 6.4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடற்கரை நகரமான ஹுவாலியனில் இருந்து வடக்கு திசையில் சுமார் 14 கிலோமீட்டர் தொலைவிலும், கடலுக்கடியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து வீடுகளில் இருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.
ஹுவாலியன் நகரில் உள்ள பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மேலும் சாலைகளும் சேதமடைந்தன. இதுதொடர்பாக புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு விவரங்கள் வெளியாகவில்லை என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #Earthquake #Taiwan #USGS #tamilnews