செய்திகள்

பேய்க்கு பயந்து பெண் போல் உடை அணியும் ஆண்கள் - தாய்லாந்தில் வினோதம்

Published On 2018-03-01 16:25 IST   |   Update On 2018-03-01 16:25:00 IST
தாய்லாந்தில் பேய்களிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ஆண்கள் இரவு பெண் உடை அணிவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாங்காக்:

தாய்லாந்தில் உள்ள கிராமத்து மக்கள் பேய்க்கு பயந்து வினோதமான செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த மாதத்தில் மட்டும் 3 இளைஞர்கள் மர்மமான முறையில் இறந்தனர். அவர்களின் ஆத்மா மற்ற ஆண்களின் உயிரை பறிக்கும் என்ற பயத்தில் அக்கிராம மக்கள் உறைந்து போகினர்.

வீட்டில் உள்ள ஆண்கள் இரவு தூங்கும் போது பெண்கள் போல் உடை அணிந்தனர். மேலும், வீட்டு வாசலில் இங்கு ஆண்கள் இல்லை என பலகை வைத்தனர். இதனை பார்த்து பேய் அவர்கள் வீட்டில் ஆண்கள் இல்லை என திரும்பி சென்றுவிடும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

அறிவியல் வளர்ச்சியடைந்த இக்காலத்தில் சில கிராமங்களில் மக்கள் இது போன்ற மூட நம்பிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பேய்க்கு பயந்து ஆண்கள் இரவில் பெண்கள் போல் உடை அணிவது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews

Similar News