செய்திகள்

பள்ளித்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற இந்திய வம்சாவளி மாணவன் இங்கிலாந்தில் மாயம்

Published On 2018-05-22 17:32 IST   |   Update On 2018-05-22 17:32:00 IST
இங்கிலாந்தில் பள்ளித்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற இந்திய வம்சாவளி மாணவன் மாயமடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Indianorigin #AbhimanyuChohan
லண்டன்:

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வரீந்தர் சோகான், நவதீதன் தம்பதி இங்கிலாந்தில் வசித்து வருகின்றனர். இவர்களது 15 வயது மகன் அபிமன்யு சோகான் மத்திய இங்கிலாந்தில் உள்ள எட்டாம் அரசர் ஹென்றி பள்ளியில் பயின்று வந்தான்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிக்கு சென்ற அபிமன்யு வீடு திரும்ப வில்லை. இதனால் அச்சமடைந்த அபிமன்யு பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், அபிமன்யு மாதிரி தேர்வில் 100 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்து வகுப்பறையில் முதல் மார்க் எடுத்துள்ளார். இதனால் மற்ற மாண்வர்களால் ஏதேனும் ஆபத்து ஏற்படும் என எண்ணி எங்காவது சென்றிருக்கலாம் என தெரிவித்தனர். மிகவும் நன்றாக படிக்கும் அபுமன்யு வீட்டை விட்டு கண்டிப்பாக செல்ல மாட்டன் என அவர் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

பள்ளித்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற இந்திய வம்சாவளி மாணவன் மாயமடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Indianorigin #AbhimanyuChohan
Tags:    

Similar News