செய்திகள்

தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

Published On 2018-06-09 20:26 IST   |   Update On 2018-06-09 20:26:00 IST
ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க சீனா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாட்டு அதிபர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #pmnarendramodi
பீஜிங்:

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் ரஷியா, சீனா, பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகள் அங்கம் வகிக்கின்றன. கடந்த ஆண்டு இந்த அமைப்பில் இந்தியாவும் தன்னை ஒரு உறுப்பினராக இணைத்துக் கொண்டது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சீனாவின் குவின்காடோ நகரில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 18 நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டு பேச உள்ளனர். 

இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று சீன அதிபர் ஜி ஜின்பிங், தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மோன் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாட்டு அதிபர் ஷவ்கத் மிர்ஸியோயேவ் ஆகியோரை சந்தித்து இந்தியாவுடனான இந்நாடுகளின் நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்பின்போது அந்நாடுகளை சேர்ந்த உயரதிகாரிகளும், இந்தியாவை சேர்ந்த உயரதிகாரிகளும் உடனிருந்தனர். #tamilnews #pmnarendramodi
Tags:    

Similar News