செய்திகள்

துனிசியாவில் ரோந்து படை மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 9 போலீசார் பலி

Published On 2018-07-08 19:22 IST   |   Update On 2018-07-08 19:48:00 IST
துனிசியாவில் ரோந்து படையினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 9 போலீசார் உயிரிழந்தனர். #Ninepolicekilled #Tunisiaattack
டுனிஸ்:

துனிசியா நாட்டின் எல்லையோரம் உள்ள புறநகர் பகுதிகளில் இயங்கிவரும் பயங்கரவாதிகள் அவ்வப்போது வெளிநாட்டினரையும் அரசுப் படையினரையும் குறிவைத்து ஆவேச தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, அரபு வசந்தம் எனப்படும் ஆட்சி மாற்ற புரட்சிக் காலமான 2011-ம் ஆண்டுக்கு பின்னர் இதுபோன்ற தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், அல்ஜீரியா நாட்டின் எல்லையோரம் துனிசியா நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ஜென்டோவ்பா மாகாணத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் வாகனங்கள்  மீது கையெறி குண்டுகளை வீசியும்,  துப்பாக்கிகளால் சுட்டும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 போலீசார் உயிரிழந்தனர். #Ninepolicekilled #Tunisiaattack  
Tags:    

Similar News