செய்திகள்
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 லட்சத்தை கடந்தது
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 லட்சத்தைக் கடந்துள்ளது.
ஜெனீவா:
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10.56 கோடியைக் கடந்துள்ளது.
மேலும் வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 7.73 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 2.58 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.05 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.